• Wed. Mar 5th, 2025

24×7 Live News

Apdin News

யுக்ரேனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்திவைப்பு – என்ன நடக்கிறது?

Byadmin

Mar 5, 2025


யுக்ரேன், அமெரிக்க ராணுவ உதவி நிறுத்தம், டிரம்ப் - ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் காரசாரமான வாதம்

யுக்ரேனுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓவல் அலுவலகத்தில் நடந்த காரசார விவாதம் நடந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ்-க்கு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் படி,” அமைதியில் கவனம் செலுத்துவது என்பதில் அதிபர் (டொனால்ட் டிரம்ப்)தெளிவாக உள்ளார். எங்களின் கூட்டாளிகளும் அந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். யுக்ரேனுக்கு எங்களின் உதவியை நிறுத்தி வைத்து, அது தீர்வு தருகிறதா என்பதை மறுஆய்வு செய்து வருகிறோம்” என கூறினார்.

புளூம்பெர்க் செய்தியின் படி, “யுக்ரேன் தலைவர்கள் அமைதிக்கு உறுதி பூணும் வரை அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிறுவனத்தின் செய்திகளின்படி, யுக்ரேனுக்கு சென்றடையாத அனைத்து ராணுவ தளவாடங்களும் நிறுத்தப்படும். யுக்ரேனுக்கு சென்று கொண்டிருக்கும் ஆயுதங்களை அப்படியே நிறுத்தி வைப்பதுடன், போலந்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்து யுக்ரேனுக்கு சப்ளை செய்வதும் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin