• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா களமிறங்குகிறதா? – உண்மை என்ன?

Byadmin

Oct 18, 2024


யுக்ரேன், ரஷ்யா, வடகொரியா

பட மூலாதாரம், ED JONES/AFP

படக்குறிப்பு, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியப் படைகள் போருக்குத் தயாராகி வருவதாக வெளியான கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது

வடகொரியர்களை உள்ளடக்கிய சுமார் 3,000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை ரஷ்ய ராணுவம் உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரேன் ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் இந்தத் தகவலை பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் ராணுவத்தின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள், ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான ராணுவக் கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு பகுதியில், இவ்வளவு பெரிய படைப் பிரிவு உருவாகி வருகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இன்னும் பிபிசிக்கு கிடைக்கவில்லை.

ஆனால், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா- யுக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுவது குறித்து வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார்.

பெஸ்கோவின் கூற்றுபடி, “பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பு மட்டுமல்ல, அமெரிக்க உளவு நிறுவனமும் இதுபோன்ற செய்தி அறிக்கைகளை வெளியிடுகிறது. இது போன்ற தகவல்களை வழங்குவதே இந்த அமைப்புகளின் வேலை. ஆனால் இதுகுறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைப்பதில்லை,” என்றார்.

By admin