• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு க்ரைமியா மிகப்பெரிய சவாலா? ஸெலென்ஸ்கி விட்டுக் கொடுக்காதது ஏன்?

Byadmin

Aug 20, 2025


யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியை வாஷிங்டன் டிசியில் சந்தித்தபோது, கிரிமியாவின் எதிர்காலம் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரில், நிலப்பரப்பு பிரச்னை யுக்ரேனில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி

திங்கள்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை வாஷிங்டனில் சந்தித்தபோது, க்ரைமியாவின் எதிர்காலம் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரில், நிலப்பரப்பு பிரச்னை யுக்ரேனில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.

ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வரவேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “க்ரைமியா தீபகற்பத்தை மீண்டும் [யுக்ரேன்] பெற முடியாது” என்று டிரம்ப் கூறினார்.

க்ரைமியா என்பது யுக்ரேனியத் தெற்குப் பகுதியில் கருங்கடலில் உள்ள ஒரு தீபகற்பம். 2014-இல் ரஷ்ய படைகள் அதை சட்டவிரோதமாக இணைத்த பிறகு, அது ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.

By admin