• Wed. Mar 12th, 2025

24×7 Live News

Apdin News

யுக்ரேன் போர்: 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஸெலன்ஸ்கி – ரஷ்யா முடிவு என்ன?

Byadmin

Mar 12, 2025


ரஷ்யா யுக்ரேன் போர், ஸெலன்ஸ்கி , மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம், அமெரிக்கா , சவுதி அரேபியா, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகம், அரிய புவி கனிமங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சௌதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தத்திற்கு யுக்ரேன் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது

சௌதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய யுக்ரேன் தரப்பினர், அமெரிக்கா பரிந்துரைத்தபடி உடனடியாக அமலாகும் வகையில் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

இனி இந்த விஷயத்தில் “ரஷ்யாதான் முடிவெடுக்க வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இனி இந்த நேர்மறையான முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் ரஷ்யாவை சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் கையில் இருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற அசாதாரணமான வார்த்தைப் போருக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பாக ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பு அமைந்தது.

By admin