• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

Byadmin

Nov 10, 2024


யுக்ரேன் ரஷ்யா போர் - போரை நிறுத்த உதவுமா டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்.

அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார்.

ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டிரம்பின் பரப்புரை பணிகளில் பங்கேற்றார். பிபிசியிடம் பேசிய அவர், “வருகின்ற புதிய நிர்வாகம், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியிடம் உள்ள அமைதியை நிலை நிறுத்துவதற்கான திட்டங்கள் என்ன என்று கேட்கும்” என்று கூறினார்.

“அவர் இங்கே வந்து, கிரைமியாவை திரும்பப் பெற்றால்தான் எங்களால் அமைதியாக இருக்க முடியும் என்று கூறினால், அவர் இந்த விவகாரத்தில் தீவிரமாக இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்,” என்று கூறினார் ப்ரையன்.

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்து பேசிய போது டொனால்ட் டிரம்பின் பிரதிநிதியாக ப்ரையன் பேசவில்லை என்று கூறினார்.

By admin