• Tue. Nov 19th, 2024

24×7 Live News

Apdin News

யுக்ரேன் – ரஷ்யா: அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் யுக்ரேன் எங்கெல்லாம் தாக்கலாம்?

Byadmin

Nov 19, 2024


ரஷ்யா - யுக்ரேன் போர்,  ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது காலம் வரை அமெரிக்கா இந்த ஏவுகணைகளை ரஷ்ய நாட்டுக்குள் பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை.

அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி வழங்கியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போரை மேலும் தீவிரப்படுத்தக் கூடும் என்று கூறி, இதற்கு முன்பு இந்த அனுமதியைத் தர அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வந்தது.

ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த பெரிய அளவிலான கொள்கை மாற்றம் நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்பின் வருகை, வருங்காலத்தில் யுக்ரேனுக்கான அமெரிக்காவின் உதவி தொடர்வதை கேள்விக்குறியாக்கியுள்ளது.

By admin