• Mon. Feb 24th, 2025

24×7 Live News

Apdin News

யுக்ரேன் – ரஷ்யா போர்: ஸெலன்ஸ்கி பதவி விலகல் குறித்து தெரிவித்தது என்ன?

Byadmin

Feb 24, 2025


யுக்ரேன் அதிபர் செய்தியாளர் சந்திப்பு: டிரம்பின் 'சர்வாதிகாரி' விமர்சனம் பற்றிக் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, “யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்,” என்று கூறினார்.

யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

யுக்ரேனில் நாளை நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் ஒரு செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு, “சில வலுவான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக” தெரிவித்தார்.

By admin