• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

யுஜிசி புதிய விதிகள் – ஆதரவும் எதிர்ப்பும் என்ன? முழு விவரம்

Byadmin

Jan 28, 2026


யுஜிசி, புதிய விதிகள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி, சாதி, மாணவர்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லக்னோவில் புதிய யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடந்த 13ஆம் தேதி, ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026’ விதிமுறைகளை வெளியிட்டது.

இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும். 2012 அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளுக்கு மாற்றாகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது.

ஆனால், இந்த புதிய விதிகளுக்கு ஒரு தரப்பு மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக வட இந்திய மாநிலங்களில்.

By admin