• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

யுஜிசி புதிய விதிகள் கூறுவது என்ன? ஒரு தரப்பு எதிர்ப்பது ஏன்?

Byadmin

Jan 27, 2026


கர்ணி சேனா அமைப்பின் போராட்டம் பற்றிய சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாகுபாடுகளைக் களைவதற்கான யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக வட இந்தியாவில் கர்ணி சேனா அமைப்பு தனது எதிர்ப்பை அறிவித்துள்ளது (சித்தரிப்புப் படம்).

இந்தியாவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட ஓர் அறிவிப்புக்கு சிலர் ஏன் கடுமையான எதிர்வினைகளைத் தருகிறார்கள்?

சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் இதனை எதிர்ப்பது ஏன்?

புதிய விதிகளின்படி, இப்போது அரசு கல்லூரியாக இருந்தாலும் சரி, தனியார் பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஈக்விட்டி கமிட்டி (சமத்துவக் குழு) அமைப்பது கட்டாயமாகும். இந்தப் பிரிவு ஒரு நீதிமன்றத்தைப் போலச் செயல்படும். ஒரு மாணவர் தனக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்பட்டதாக உணர்ந்தால், அவர் அங்கு சென்று புகார் அளிக்கலாம். அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், கல்வி நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

புதிய விதிகள் கூறுவது என்ன?

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதற்காக யுஜிசி தனது தற்போதைய விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

ஜனவரி 13- அன்று யுஜிசி ‘பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை 2026’-ஐ வெளியிட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதும், எந்தவொரு பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

By admin