• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

“யுரேனியம் செறிவூட்டலை இரான் தொடங்கலாம்” – ஐஏஇஏ கூறுவது என்ன?

Byadmin

Jun 29, 2025


இரான், அமெரிக்கா, இஸ்ரேல், அணுசக்தி, அணுகுண்டு, ஐ.நா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டலை தொடங்கும் திறனைக் கொண்டுள்ளது என ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் க்ரோஸி கடந்த வாரம் மூன்று இரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதே தவிர முழுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். இது இரானின் அணுசக்தி மையங்கள் “முழுமையாக அழிக்கப்பட்டன” என்கிற டிரம்ப்பின் கூற்றுக்கு முரணாக உள்ளது.

“அனைத்தும் மறைந்துவிட்டன என்றும் அங்கு எதுவுமே இல்லை என யாருமே வெளிப்படையாக கூற முடியாது” என சனிக்கிழமையன்று க்ரோஸி தெரிவித்தார்.

இரான் அணு ஆயுத தயாரிப்பை நெருங்கிவிட்டது எனக்கூறி கடந்த ஜூன் 13ம் தேதி அந்நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவ நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. அதன் பின்னர் இந்த மோதலில் இணைந்த அமெரிக்கா ஃபோர்டோ, நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஷான் ஆகிய இரானின் அணுசக்தி நிலைகள் மீது குண்டுகளை வீசியது.

By admin