• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? போதி தர்மர், சோழர் போர் முறை பற்றிய அரிய தகவல்

Byadmin

Nov 9, 2024


யுவான் சுவாங், தமிழ்நாடு, சோழர் போர் முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுவான் சுவாங், சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்த சங்கான் நகரத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்த காஞ்சிபுரம் வரை சுமார் 6,000 மைல்கள் பயணம் செய்தார்

வில்லியம் டால்ரிம்பிள் எழுதி சமீபத்தில் வெளிவந்த புத்தகம் ஒன்று, பழங்கால தமிழக அரசர்கள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.

நீண்டதூர பயணங்கள் என்பவை இப்போதே கடினமானவையாக இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்பதே கடினமாக இருந்திருக்கும். அந்த காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு பௌத்த துறவி, ஒரு குளிர் காலத்தில் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். அவரது பெயர் யுவான் சுவாங்.

அது கி.பி. 629வது வருடம். யுவான் சுவாங்கிற்கு அப்போது வயது வெறும் 29 தான். நாளந்தா பல்கலைக் கழகத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்த தகவல்கள், அவரை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தன. நாளந்தாவில்தான் உலகிலேயே மிகப் பெரிய பௌத்த நூலகம் இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தது. ஆகவே மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையெல்லாம் மீறி, அந்தப் பயணத்தை மேற்கொண்டார் அந்த இளைஞர். அவர் அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய போது 17 ஆண்டுகள் கழிந்திருந்தன. சீனாவின் மேற்குப் பகுதியில் இருந்த சங்கான் நகரத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்த காஞ்சிபுரம் வரை சுமார் 6,000 மைல்கள் அவர் பயணம் செய்திருந்தார்.

By admin