• Fri. Dec 12th, 2025

24×7 Live News

Apdin News

யுவ்ராஜ் சிங்: புற்றுநோயுடன் போராடி உலகக்கோப்பை பெற்று தந்தவர் பற்றிய 4 விஷயங்கள்

Byadmin

Dec 11, 2025


யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

யுவ்ராஜ் சிங் – இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக விளங்கியவர். ஒரு ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறார்.

இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடியிருக்கும் அவர், பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த யுவ்ராஜ், பத்மஶ்ரீ, அர்ஜுனா போன்ற பல விருதுகளும் வாங்கியிருக்கிறார்.

டிசம்பர் 12 அன்று பிறந்த நாளை கொண்டாடும் யுவ்ராஜ் சிங் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

1. ‘பிக் கேம் பிளேயர்’

“யுவ்ராஜ் சிங் போன்ற ஒரு பிக் கேம் பிளேயரை நான் பார்த்ததில்லை” என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ.

”மிகப்பெரிய, மிகவும் முக்கியமான போட்டிகளிலும், தொடர்களிலும் முன்னணி வீரர்கள்கூட நெருக்கடி காரணமாக சோபிக்கத் தவறுவார்கள். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் எப்போதும் சிறப்பாக விளையாடும் வீரர்களை ‘பிக் கேம் பிளேயர்’ என்பார்கள். யுவ்ராஜ் அப்படியான ஒரு வீரர்” என்கிறார் நானீ.

By admin