• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

யூடியூபர் இர்ஃபான்: தொப்புள் கொடி சர்ச்சையால் இர்ஃபானுக்கு நெருக்கடி – தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

Byadmin

Oct 22, 2024


இர்ஃபான், தொப்புள் கொடி

பட மூலாதாரம், FACEBOOK/Irfan’s view

படக்குறிப்பு, யூடியூபர் இர்ஃபான்

தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான் என்பவர், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் புகார் அளித்துள்ளார்.

குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய முந்தைய விவகாரத்தைப் போல அல்லாமல், இம்முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோ அவரது யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவரது செயல் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

By admin