• Wed. Apr 30th, 2025

24×7 Live News

Apdin News

ரஃபேல் போர் விமானங்கள்: சீனா – பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிக்குமா?

Byadmin

Apr 30, 2025


ரஃபேல்-எம்

பட மூலாதாரம், Rafale

படக்குறிப்பு, இந்தியா பிரான்சுடன் 26 ரஃபேல்-எம் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

  • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கள்கிழமையன்று கையெழுத்திட்டன.

இந்த விமானங்களின் மொத்த விலை சுமார் ரூ.64,000 கோடியாக இருக்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களை இந்தியா பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து வாங்குகிறது.

இந்த ரஃபேல் விமானங்களை ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நிறுத்தி பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

By admin