0
‘காந்த குரலோன்’ அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ பாம்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற’ இன்னும் எத்தன காலம் ‘ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தினை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாம்’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், டி எஸ் கே, பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி. எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை சாம்ராட்’ டி . இமான் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தை கேம்பிரியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதா சுகுமார்- சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் ‘பாம் ‘ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இன்னும் எத்தன காலம் எங்கிட்ட மறைப்ப.. ‘எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மணி அமுதவன் எழுத, பின்னணி பாடகர் கார்த்திக் மற்றும் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
காதலர்களுக்கு இடையேயான புரிதலும்… காதல் உணர்வும் .. தொடர்பான இந்தப் பாடல் எளிமையான பாடல் வரிகளாலும், இனிமையான மெட்டாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.