• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

ரஜினிகாந்த் கூலி உள்பட பல திரைப்படங்களில் சாமானியராக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?

Byadmin

Aug 10, 2025


தமிழ்நாடு, ரஜினிகாந்த், திரைப்படங்கள், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், @sunpictures

தமிழ்நாட்டில், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கமானது தான் என்றாலும், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் கூலி திரைப்படத்தின் முன்பதிவில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேரளாவில் ரூ.3 கோடிக்கு மேல் மதிப்புள்ள 2,00,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன என்றும், கூலி திரைப்படம் கேரளாவில் ஒரு தமிழ் படத்திற்கான பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி கூறுகிறது.

‘கூலி’ படத்தின் முன்னோட்டத்திலிருந்து, ஒரு துறைமுகத்தில் தினக்கூலிக்கு வேலை செய்யும் நபராக ரஜினி நடித்திருப்பது போல் தெரிகிறது. ரஜினியின் திரை வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், சாமானிய மனிதர்களுடன் எளிதில் பொருந்திப் போகக்கூடிய கதாபாத்திரங்களையே அவர் அதிகம் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

திரையில் சாமானியர்களைப் பிரதிபலிக்கும், ‘எம்ஜிஆர்’ ஃபார்முலா கதாபாத்திரங்கள் தான் அவரை இன்றும் சூப்பர்ஸ்டாராக நிலைத்து நிற்க வைத்துள்ளன என விமர்சகர்கள் கூறும் நிலையில், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அத்தகைய பாத்திரத்தை ‘கூலி’ மூலம் அவர் ஏற்றுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு ரஜினி நடித்த சில முக்கிய ‘காமன் மேன்’ (Common man) கதாபாத்திரங்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

By admin