• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

ரஜினி 50: பேருந்து நடத்துநராக இருந்த ரஜினி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது எப்படி? பிரமிப்பூட்டும் 50 திரைப்பயணம்

Byadmin

Aug 15, 2025


ரஜினிகாந்த், ரஜினி 50, கூலி, லோகேஷ் கனகராஜ்

பட மூலாதாரம், Sun Pictures

படக்குறிப்பு, ரஜினிகாந்த்

    • எழுதியவர், சுதா ஜி திலக்
    • பதவி,

திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருப்பது சுலபமான விஷயம் அல்ல.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளார்’ என்பது அவரது நீண்ட பயணத்தை மட்டுமல்ல, மாறாக அவர் தொடர்ந்து திரைத்துறையை ஆட்சி செய்துள்ளார் என்பதையும் சேர்த்தே குறிக்கிறது.

அவரது படங்கள் திரையரங்குகளை கோயில்களாகவும், ரசிகர்களை பக்தர்களாகவும் மாற்றியுள்ளன. அவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ் திரைப்படத் துறையில் உருவானவை. தமிழ் சினிமாவில் அவர் நடித்த பல படங்கள் பல தலைமுறையினரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1975-ல், பின்னர் உலகம் முழுக்க ‘ரஜினிகாந்த்’ என்று அறியப்பட்ட சிவாஜி ராவ் கெய்க்வாட், சென்னையில் (அப்போது மெட்ராஸ்) நடந்த அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் முதல் முறையாகக் கால் பதித்தார். அந்த படத்தில், அவர் சிறிது நேரம் மட்டுமே தோன்றினாலும், திமிரான கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பு, அனைவரின் நினைவிலும் பதிந்துவிட்டது.

By admin