• Thu. Oct 30th, 2025

24×7 Live News

Apdin News

ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Byadmin

Oct 30, 2025


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதவான் நெத்தி குமார இன்று புதன்கிழமை (29) பிற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் அழைக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை விரைவுப்படுத்தி சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

By admin