• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

ரணில் விக்ரமசிங்க கைதுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் : ஒரே குரலில் தெரிவித்த கருத்து என்ன?

Byadmin

Aug 24, 2025


ரணில் விக்ரமசிங்க கைதுக்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை வரும் 26ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இதுவரை காலம் பிரிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியாக உருவாகி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் முதல் தற்போது வரை எதிர்கட்சிகள் ஒன்றாக கூடி பல்வேறு வகையிலான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

By admin