• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

ரத்தன் டாடாவுக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர் யார்?

Byadmin

Oct 13, 2024


ரத்தன் டாடா

பட மூலாதாரம், Lakshmanan

படக்குறிப்பு, லட்சுமணனும் அவரது மனைவியும் 2019-ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று ரத்தன் டாடாவைச் சந்தித்தனர்

“ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதமாக, பல மணி நேரம் அவருக்கு அவரது வீட்டிலேயே சிகிச்சை கொடுத்தேன். அந்த நேரங்களில் எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பேசினார்.”

இந்த வார்த்தைகளைச் சொல்வது கோவை மருதமலையைச் சேர்ந்த வர்ம வைத்தியர் கோ.மு.லட்சுமணன். அவர் தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியது, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை.

கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன். கடந்த 2019-ஆம் ஆண்டில், மும்பையில் ரத்தன் டாடாவின் வீட்டில் வைத்தே பல நாட்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் இவர். ரத்தன் டாடாவின் மறைவுக்கு, தன் மனைவி மனோன்மணியுடன் மும்பைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.

ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளித்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் லட்சுமணன்.

By admin