• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

ரமலான் பண்டிகை – மத்திய கிழக்கில் மக்கள் தொழுகை நடத்திய காட்சிகள்

Byadmin

Mar 21, 2026


ரமலான் பண்டிகை, மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெருசலேம் பழைய நகரத்தின் சுவர்களுக்கு வெளியே இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு மத்தியில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள். பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரான் மீது தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கில் நிகழும் போர் காரணமாக, ஜெருசலேமின் பழைய நகரத்தில் உள்ள அக்சா மசூதியின் சுற்றுச்சுவர் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தது.

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. காஸாவில் நிகழும் போர் காரணமாகவும், இரானில் நிகழும் போர் காரணமாகவும் ரமலான் பண்டிகை மிக அமைதியாகவே கொண்டாடப்பட்டது. காஸாவில் மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தொழுகை நடத்தினர். மேலும், ஜெருசலேமில் முக்கிய புனித தலமான அல்-அக்சா மசூதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டதால், முஸ்லிம்கள் தெருக்களில் கூடி தொழுகை நடத்தினர்.

ரமலான் பண்டிகை, மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிழக்கு ஜெருசலேமில் உள்ள வாடி அல்-ஜோஸ் நுழைவுவாயில் மற்றும் சலா அட்-தின் தெருவில் பாலத்தீனர்கள் கூடியதையடுத்து, அவர்களை தடுக்கும் இஸ்ரேலிய காவல்துறை. பாதுகாப்பு காரணங்களுக்காக 1967ம் ஆண்டிலிருந்து முதன்முறையாக தற்போது மூடப்பட்டுள்ள அல்-அக்சா மசூதிக்கு செல்வதற்கு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் முயற்சித்தனர்.
ஜெருசலேம் பழைய நகரத்தின் சுவர்களுக்கு வெளியே  தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெருசலேம் பழைய நகரத்தின் சுவர்களுக்கு வெளியே தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
ஜெருசலேமில் சலா அல்-தின் தெரு நெடுக பிரார்த்தனை நடத்தும் முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெருசலேமில் சலா அல்-தின் தெரு நெடுக பிரார்த்தனை நடத்தும் முஸ்லிம்கள்
ரமலான் பண்டிகை, மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல்-ஃபித்ர் பண்டிகையின் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக, மார்ச் 20, 2026 அன்று, ஜெருசலேமின் பழைய நகரச் சுவர்களுக்கு வெளியே கூட முயன்ற முஸ்லிம் வழிபாட்டாளர்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கலைத்தன.
காஸா, இஸ்ரேல், ரமலான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா நகரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு உயிரிழந்த ஒருவரின் கல்லறைக்கு முன்பாக பிரார்த்திக்கும் பாலத்தீன பெண் ஒருவர்
காஸா நகரில் இடிபாடுகளுக்கிடையே தொழுகை நடத்தும் முஸ்லிம் பெண் ஒருவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா நகரில் இடிபாடுகளுக்கிடையே தொழுகை நடத்தும் முஸ்லிம் பெண் ஒருவர்
காஸா நகரில் தொழுகை நடத்தும் பாலத்தீன முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா நகரில் தொழுகை நடத்தும் பாலத்தீன முஸ்லிம்கள்
2026 மார்ச் 20 அன்று, கத்தாரின் தோஹாவில், பெருநாள் பண்டிகையின் முதல் நாளில், பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து ஒரு இமாம் சொற்பொழிவாற்றுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2026 மார்ச் 20 அன்று, கத்தாரின் தோஹாவில், பெருநாள் பண்டிகையின் முதல் நாளில், பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து ஒரு இமாம் சொற்பொழிவாற்றுகிறார்.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில், இடிபாடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த வண்ணமயமான ரயிலில் ஏறி, ஜோபார் பகுதி குழந்தைகள் பண்டிகையை கொண்டாடினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில், இடிபாடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த வண்ணமயமான ரயிலில் ஏறி, ஜோபார் பகுதி குழந்தைகள் பண்டிகையை கொண்டாடினர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin