• Wed. Dec 10th, 2025

24×7 Live News

Apdin News

ரமேஷ்: இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?

Byadmin

Dec 10, 2025


இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்
படக்குறிப்பு, ரமேஷ்

திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது

இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர்.

கண்டி – போபிட்டிய – பௌலான தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்தார்.

ஒரு நாள் மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற போது, அவர் வெட்டிய மரமே அவர் மீது வீழ்ந்துள்ளது. இதனால் ரமேஷ் மாற்றுத்திறனாளியானார்.

மரம் வீழ்ந்தமையினால் முதுகெலும்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே ரமேஷ் இவ்வாறு ஓரிடத்திலேயே இருந்து வருகின்றார்.

By admin