ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், உள்துறை மந்திரி ஆகியோர் மேற்கு சிட்னியில் உள்ள லகேம்பா மசூதிக்கு நேற்று வருகை தந்தனர்.
அப்போது, அங்கிருந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் அல்பானீஸைக் கண்டித்து கூச்சலிட்டனர்.
காசாவில் நடக்கும் வன்முறையை ஆஸ்திரேலிய அரசு ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷம் எழுப்பப்பட்டது.
இதனால் அமைதியாக நடைபெறும் கொண்டாட்டத்தில் ஒரு பதட்டமான சூழல் உருவானது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல்-காசா மோதல் குறித்த ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டின் மீதான அதிருப்தியால் இந்தப் போராட்டம் தூண்டப்பட்டதாகக் கூறப்பட்டது.