• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல் | Seeman urges to closure of liquor shops during Ramadan and Good Friday

Byadmin

Mar 29, 2025


சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடை களை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க மறுப்​பது மிகுந்த ஏமாற்​றத்​தை​ அளிக்கிறது.

தமிழகத்​தில் மிகக் குறைந்தஅளவில் உள்ள சமணர்​களின் திரு​விழா​வான மகாவீரர் ஜெயந்​தியை முன்​னிட்டு மதுக் கடைகளை​யும், இறைச்​சிக் கடைகளையும் மூட உத்​தர​ விடும் தமிழக அரசு, அவர்​களைவிட பெரும்​பான்மை சமயத்​தின​ரான கிறிஸ்​தவ, முஸ்​லிம் மக்​களின் கோரிக்​கைக்கு சிறிதும் மதிப்​பளிக்​காதது வன்​மை​யான கண்​டனத்​துக்​குரியது.

குறிப்​பிட்ட சமய மக்​களின் உணர்​வு​களுக்கு ஆதர​வாக​வும், சிலருக்கு எதி​ராக​வும் அரசு செயல்​படு​வது சிறிதும் அறமற்​றது. எனவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்​களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வகை​யில் புனித வெள்ளி, ரம்ஜான் பண்​டிகை அன்​று, தமிழகம்முழுவதும் மதுக்​கடைகளை மூடவேண்​டும். இதற்கான அரசாணையை நடப்பு சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரிலேயே வெளி​யிட வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யுள்​ளார்​



By admin