ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் – ஓய்வு பெறும் நாளில் கூறியது என்ன?
மஹாராஷ்டிராவின் சதாராவில் பிறந்த சுரேகா, மின்னணு பொறியியலில் டிப்ளமா முடித்துள்ளார்.
1996ம் ஆண்டில் இவர் லோகோ பைலட்டாக ஆனார். இந்தியா உட்பட ஆசியாவிலேயே லோகோ பைலட்டான முதல் பெண் இவர் ஆவார்.
இந்தாண்டு 36 ஆண்டுகால பணிக்கு பிறகு இவர் ஓய்வுபெற்றார்.
தன் வேலைக்கு மத்தியில் தன் குடும்பத்தைதும் நிர்வகிக்கிறார். கணவர் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். குடும்பம், வேலை இரண்டையும் நிர்வகிப்பது எளிதானது அல்ல.
தபால்களை ஏற்றிச்செல்லும் ரயில், உள்ளூர் ரயில், பெண்கள் சிறப்பு ரயில், சிறப்புமிக்க டெக்கான் குயின், வந்தே பாரத் என அனைத்து வகை ரயில்களையும் அவர் இயக்கியுள்ளார்.
ரயில் சிக்னல்களை நான் மிகவும் மிஸ் செய்வேன் என்கிறார் சுரேகா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு