மத்திய இலண்டன் ரயில் நிலையத்திற்கு வெளியே நெரிசல் நேரத்தில் பாதசாரிகள் மீது பஸ் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 8:20 மணியளவில் இலண்டனின் பரபரப்பான விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள விக்டோரியா தெருவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை காலை ஒரு இரட்டை அடுக்கு பஸ் மோதியதில் பல பயணிகள் மற்றும் பாதசாரிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் தற்போதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை, இலண்டனின் விமான ஆம்புலன்ஸ் சேவை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நடைபாதையில் ஓரளவு நிறுத்தப்பட்டதாகத் தோன்றும் வாகனத்தைச் சுற்றி அவசர சேவைகள் கூட்டம் கூட்டமாக இருப்பதை சம்பவ இடத்திலிருந்து வெளிவரும் படங்கள் காட்டுகின்றன.
இலண்டன் தீயணைப்புப் படை, பெருநகர பொலிஸார் மற்றும் இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை சம்பவ இடத்துக்கு வந்துள்ளன.
The post ரயில் நிலையத்திற்கு வெளியே பாதசாரிகள் மீது பஸ் மோதியதில் பலர் காயம் appeared first on Vanakkam London.