• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

Byadmin

Aug 5, 2025


விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபய் குமார் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளக்கூடும் எனத் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போகிறது என எனக்கு தெரியவந்துள்ளது. நான் இதை கேள்விப்பட்டேன், ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. இது ஒரு நல்ல நடவடிக்கை. இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்…” என்று கூறினார்.

ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு செல்லும் ஒவ்வொரு இந்திய பொருளுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்த வரிக்கு மேல் கூடுதல் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா எண்ணெய் வாங்குவது யுக்ரேன் போரைத் தொடர ரஷ்யாவுக்கு உதவுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

By admin