ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வீடுகளில் உள்ள அறைகள் குலுங்கியதையும் கட்டடங்கள் அதிர்ந்ததையும் ரஷ்ய சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட வீடியோக்களில் பார்க்கலாம்.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் (USGS) குறிப்பிட்டது.
பொருள் சேதம், உயிர் சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை.
கம்சட்கா தீபகற்பம், பசிபிக் “நெருப்பு வளையத்தில்” (Ring of Fire) அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
The post ரஷ்யாவில் 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது! appeared first on Vanakkam London.