• Mon. Jan 20th, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்யா – இரான் இருநாட்டு ஒப்பந்தத்தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலா?

Byadmin

Jan 20, 2025


ரஷ்யா - இரான்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ரஷ்யா சென்றுள்ள இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார்.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார மற்றும் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும்.

இரு நாடுகள் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் சூழலில், இந்த தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதின், “ரஷ்யாவும், இரானும் வெளிநாட்டு அழுத்தங்களை கடுமையாக எதிர்க்கும்,” என்று கூறினார்.

இந்த ஒப்பந்தங்கள், இரு நாட்டின் மூலோபய ஒத்துழைப்பின் புதிய துவக்கம் என்றும், இரானின் ‘அண்டை நாடுகள் கொள்கையில்’ ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்றும் பெசெஷ்கியன் கூறினார்.



By admin