ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரஷ்யாவின் 300 நிறுவனங்கள் மீது இங்கிலாந்து புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த தடைகள், ரஷ்யாவின் முக்கிய நிதி ஆதாரங்கள், இராணுவ உபகரண விநியோக சங்கிலி மற்றும் வருவாய் ஓட்டங்களை பாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அளவை கடத்தும் டிரான்ஸ்நெஃப்ட் (Transneft) நிறுவனத்தையும், ரஷ்யாவின் ‘நிழல் கடற்படை’ என அடையாளம் காணப்பட்ட 48 எண்ணெய் டேங்கர்களையும் இந்தத் தடைகள் நேரடியாக குறிவைக்கின்றன.
இந்த நடவடிக்கைகள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவின் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும், எரிசக்தி ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் 27 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இங்கிலாந்து சுட்டிக்காட்டியுள்ளது.
The post ரஷ்யா–உக்ரைன் போர் நான்காம் ஆண்டு: ரஷ்யாவின் 300 நிறுவனங்களுக்கு கடும் பொருளாதாரத் தடைகள் appeared first on Vanakkam London.