• Wed. Nov 20th, 2024

24×7 Live News

Apdin News

ரஷ்யா: ஏழு வயது சிறுவனுக்கு வேலை வழங்கிய ஐடி நிறுவனம்- கோடிங்கில் அவர் செய்தது என்ன?

Byadmin

Nov 20, 2024


ரஷ்ய ஐடி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஐடி கோடிங்கில் அதீத திறமை கொண்டுள்ள ஏழு வயதான ஒரு சிறுவனை, வேலைக்குச் செல்ல தகுதியான வயது வந்தவுடன் தங்களது மேலாண்மை குழுவில் சேர ரஷ்ய மென்பொருள் நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த சேர்கே, தனது ஐந்து வயதிலிருந்தே மென்பொருள் கோடிங் முறைகள் குறித்து விளக்கும் வீடியோக்களைப் பதிவேற்றி தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த வீடியோக்களின் அடிப்படையில், தகவல் பாதுகாப்பு நிறுவனமான ‘Pro32’ , அச்சிறுவனுக்கு கார்ப்பரேட் பயிற்சித் தலைவர் பதவிக்கான வேலைவாய்ப்பை வழங்கி, அதற்கான எழுத்துப்பூர்வ கடிதத்தை அனுப்பியது.

By admin