• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்யா ஒரே நாளில் 40 போர் விமானங்களை இழந்ததா? டிரோன் மூலம் யுக்ரேன் தாக்குதல்

Byadmin

Jun 2, 2025


யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்

பட மூலாதாரம், SBU source

படக்குறிப்பு, போர் விமானங்களை டிரோன்கள் தாக்கியதாக வெளியான காணொளி

  • எழுதியவர், பால் ஆடம்ஸ்
  • பதவி, ராஜாங்க செய்தியாளர்

ஞாயிறு அன்று, ரஷ்யாவில் உள்ள நான்கு விமான தளங்களில் உள்ள 40 ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட “ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)” என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, குரூயிஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூடிய 34% போர் விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக எஸ்பியூ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. இதில் டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் மீது தூரத்தில் இருந்தே இயக்கக்கூடிய கூரைகள் உடன் விமானப்படை தளங்கள் அருகே கொண்டு வரப்பட்டு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது.

ஐந்து பிராந்தியங்களில் யுக்ரேனின் தாக்குதல்களை உறுதிபடுத்தியுள்ள ரஷ்யா இதனை “பயங்கரவாத செயல்” என விமர்சித்துள்ளது. இந்நிலையில் தங்களின் எல்லைக்குள் நள்ளிரவில் பலமான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

By admin