அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி யுக்ரேன் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கொடுத்த நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி வழங்கிய அடுத்த நாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இன்று காலை ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை(ATACMS) பயன்படுத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்று சேதமடைந்தது. மேலும் அதன் உதிரி பாகங்கள் பிராந்தியத்தில் உள்ள ஒரு ராணுவ வளாகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தியது என்று அதன் அறிக்கையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.