• Thu. Nov 21st, 2024

24×7 Live News

Apdin News

ரஷ்யா-யுக்ரேன் போர் : டிரம்பின் உறுதிப்படி ஒரே நாளில் போர் நிறுத்தம் ஏற்படுமா?

Byadmin

Nov 21, 2024


ரஷ்யா-யுக்ரேன்: அமைதி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, டிரம்ப் பதவியேற்றவுடன் ரஷ்யா-யுக்ரேன் இடையே பேச்சுவார்த்தைகளை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் யுக்ரேனில் “ஒரே நாளில்” போர் நிறுத்தப்படும் உறுதியளித்துள்ளார். அவர் அதை எப்படி செய்யப் போகிறார் என்று விவரிக்கவில்லை.

அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவர் அதை எப்படி செய்யப் போகிறார் என்பது குறித்துப் பல விதமான கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ரஷ்யா-யுக்ரேன் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகப் பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பார் என்று யுக்ரேன் எதிர்ப்பார்க்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி “ராஜ்ஜீய வழிமுறைகள்” மூலம் அடுத்த ஆண்டுக்குள் போரை நிறுத்துவதற்கான தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படியொரு பேச்சுவார்த்தை இந்த நேரத்தில் நடைபெற்றால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

By admin