• Sat. Dec 6th, 2025

24×7 Live News

Apdin News

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சீன ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Dec 6, 2025


ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சீன ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய வருகையை சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

சீன ஊடகங்களும் நிபுணர்களும் புதினின் வருகையை இந்தியாவின் மீதான ‘அமெரிக்க அழுத்தத்துடன்’ தொடர்புபடுத்துகிறார்கள்.

“அமெரிக்கா, இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அதிபர் புதினின் இந்திய பயணம் நடைபெறுவதாக” சீன ஊடகங்களில் கூறப்படுகிறது.

அதோடு, எரிசக்தி தொடர்பான உறவுகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதின் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியா-ரஷ்யா உறவுகளில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு புதினின் இந்தப் பயணம் நிகழ்கிறது.

By admin