• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

ரஸியா சுல்தான்: பெண் என்ற காரணத்திற்காகவே வீழ்த்தப்பட்ட டெல்லியின் முதல் முஸ்லிம் பெண் ஆட்சியாளர்

Byadmin

Aug 1, 2025


ரஸியா சுல்தான், முஸ்லிம் பெண் ஆட்சியாளர், இந்தியா, டெல்லி, வரலாறு

பட மூலாதாரம், SPECTRUMOFTHOUGHTS

படக்குறிப்பு, ரஸியா சுல்தான் டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஷம்சுதீன் இல்துமிஷின் மகள் ஆவார்.

செங்கிஸ் கானின் படைகள் 1206ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் புல்வெளிகளில் தங்கள் குதிரைகள் கொண்டு மிதித்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான ஷம்சுதீன் இல்துமிஷுக்கு ஒரு மகள் பிறந்தாள், பின்னர் அவர் ரஸியா பின்த் இல்துமிஷ் என்று அறியப்பட்டார்.

டெல்லியில் குதுப் மினாரின் கட்டுமானம் குதுபுதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டது, ஆனால் அது ரஸியாவின் தந்தை சுல்தான் இல்துமிஷால் முடிக்கப்பட்டது.

மின்ஹாஜஸ் சிராஜ் ஜுஸ்ஜானி தனது ‘தபகத்-இ-நசிரி’ புத்தகத்தில், “டெல்லியை ஆண்ட ஆட்சியாளர்களில், இல்துமிஷை விட தாராள மனப்பான்மை கொண்ட, அறிஞர்கள் மற்றும் பெரியவர்களை மதித்த நபர் யாரும் இல்லை என்று நம்பப்படுகிறது” என்று எழுதியுள்ளார்.

பதினான்காம் நூற்றாண்டில் மொராக்கோவிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணி இபன் பட்டுடா, தனது ‘ரெஹ்லா’ புத்தகத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்குவதிலும் இல்துமிஷுக்கு நிகர் யாரும் இல்லை” என்று எழுதியுள்ளார்.

By admin