• Thu. Dec 19th, 2024

24×7 Live News

Apdin News

ராகுல் காந்தி: நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு; பாஜக எம்பி காயம் – என்ன நடந்தது?

Byadmin

Dec 19, 2024


 பாஜக எம்பி பிரதாப் சாரங்கி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், பிரதாப் சாரங்கி காயத்துடன் சக்கர நாற்காலியில் தூக்கிச் செல்லப்படுவதும், அவரது தலையில் கட்டு போடப்பட்டிருப்பதும் தெரிகிறது

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு எம்.பியை இடித்துத் தள்ளியதாக பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதாப் சாரங்கி செய்தியாளர்களிடம், “ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை கடுமையாக இடித்துத் தள்ளினார். அந்த எம்.பி. என் மீது விழ, நான் கீழே விழுந்தேன்” என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், பிரதாப் சாரங்கி காயத்துடன் சக்கர நாற்காலியில் தூக்கிச் செல்லப்படுவதும், அவரது தலையில் கட்டு கட்டப்பட்டதும் தெரிகிறது.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு நடந்த விவகாரத்தில், ராகுல் காந்தி தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

By admin