• Fri. Aug 8th, 2025

24×7 Live News

Apdin News

ராகுல் காந்தி: போலி வாக்காளர்கள் குறித்த 5 புகார்களும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்

Byadmin

Aug 8, 2025


ராகுல் காந்தி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் “வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி” நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

“இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காதது, மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவைத் ‘திருட’ பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதற்கான சான்றாகும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ‘தவறாக வழிநடத்துவதாக’ இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

By admin