1
ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஒருகாலத்தில் கலக்கியவர். இப்போது கேரக்டர் ரோலில் பட்டையை கிளப்பிவருகிறார். அதிலும் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் ராஜமாதா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உறவுக்கார பெண்ணான ரம்யா கிருஷ்ணன் 80கள், 90களின் முற்பகுதியில் ஹீரோயினாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்த அவர் கவர்ச்சி ரோல், ஹோம்லி ரோல் என எதுவாக இருந்தாலும் கலக்கியவர். ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இரண்டாவது ஹீரோயினாகவும் கதைக்கு தேவைப்பட்டால் நடிக்கவும் செய்தார்.

திறமை வாய்ந்த நடிகை: வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் அவரை ரசிகர்கள் பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் திறமை அவரை உயரத்துக்கே கொண்டு சென்றது. அதனால்தான் ரஜினிக்கு படையப்பா படத்தில் வில்லியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். இன்றுவரை பல நடிகைகளுக்கு ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் ட்ரீம் ரோலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரோலில் அவ்வளவு கம்பீரமாக நடித்திருந்தார்.
மேகி ரம்யா: ரஜினியுடன் நடித்து ஸ்கோர் செய்ததுபோல் கமலுடன் பஞ்சதந்திரம் படத்தில் மேகி ரோல் ஏற்று அதிலும் அப்ளாஸை அள்ளினார். இப்படி எந்த ரோல் கொடுத்தாலும் அசாலட்டாக ஸ்கோர் செய்யும் அவரை இந்திய அளவில் ஃபேமஸ் ஆக்கியது என்றால் பாகுபலி படத்தில் அவர் ஏற்றிருந்த ராஜமாதா ரோல். அந்த கேரக்டரில் கம்பீரமாக தோன்றி அனைவரையும் கவர்ந்தார். மேலும் அவரை ராஜமாதா என்றும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
பாகுபலி Epic: வம்சி கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டு செட்டிலான அவர் இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார். அந்தவகையில் ஜெயிலர் 2 படத்தில் இப்போது கமிட்டாகியிருக்கிறார். மேலும் அடுத்ததாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி Epic என முழு நீள திரைப்படமாக 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சௌந்தர்யா பற்றி ரம்யா: மறைந்த நடிகை சௌந்தர்யா பற்றி பேசியிருக்கும் அவர், “சௌந்தர்யாவுடன் படையப்பா, அமரு, ஹலோ பிரதர் ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் மிகவும் வெகுளித்தனமானவர். அழகான குழந்தை போன்றவர். தன்னை தானே சினிமாவில் செதுக்கிக்கொண்டர். அவரை புகழ் ஒருதுளிகூட மற்றவில்லை. சௌந்தர்யா மாதிரி அழகான மனிதரை நான் பர்த்ததே இல்லை. என்னுடைய மிகச்சிறந்த தோழிகளில் ஒருவர்” என்றார்.
நன்றி : tamil.filmibeat.com