பட மூலாதாரம், Rajasaab/X
-
- எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
- பதவி, பிபிசிக்காக
-
இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு, பிரபாஸ் ‘ராஜாசாப்’ திரைப்படத்தின் மூலம் புதிய தோற்றத்திலும், புதிய கதைக்களத்திலும் மீண்டும் வந்துள்ளார். நகைச்சுவைப் படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற இயக்குனர் மாருதி மற்றும் பிரபாஸ் கூட்டணியில் உருவான இந்த ‘ராஜாசாப்’ ரசிகர்களைக் கவர்ந்ததா? இல்லையா?
படத்தின் கதைப்படி கங்காமா (ஜரினா வஹாப்) ஒரு வயதான பெண். அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் அவரது பேரன் ராஜு (பிரபாஸ்) இருக்கிறார். ராஜுவின் சிறுவயதிலேயே அவரது பெற்றோர் இறந்துவிடுகின்றனர். கங்காமா ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தனது கணவர் கனக ராஜுவை (சஞ்சய் தத்) மட்டும் மறக்காமல் நினைவில் வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டுச் சென்ற தனது கணவரை, வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்துவிட வேண்டும் என்பதே அந்த மூதாட்டியின் தீராத ஆசையாக உள்ளது.
பட மூலாதாரம், Rajasaab/X
தனது தாத்தாவை தேடி ராஜு ஐதராபாத் செல்கிறார். அங்கு தங்குமிடத்தில் ஒரு கன்னியாஸ்திரியை (நிதி அகர்வால்) சந்திக்கும் அவர், கண்டதும் காதல் கொள்கிறார். இதற்கிடையில், எதிர்பாராத விதமாக பைரவியை (மாளவிகா மோகனன்) சந்திக்கிறார்.
தாத்தா நர்சாப்பூர் காட்டில் இருப்பதை அறிந்த ராஜு, அங்கு செல்கிறார். அங்கிருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் தாத்தா ஏன் வசிக்கிறார்? அந்தப் பங்களாவிற்கும் அங்குள்ள பேய்க்கும் நாயகனுக்கும் இடையிலான மோதல் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு காலத்தில் இளவரசியாக வாழ்ந்த கங்காமா, எப்படி ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்? போன்ற பல மர்மமான கேள்விகளுக்கான விடைகளே படத்தின் மீதிக் கதையை நகர்த்திச் செல்கின்றன.
பட மூலாதாரம், Rajasaab/X
ஹாரர் சினிமா என்றால் திரையில் இருக்கும் நடிகர்களும், பார்க்கும் பார்வையாளர்களும் சேர்ந்து பயப்படுவார்கள். ஹாரர்-காமெடி என்றால் அவர்கள் திரையில் பயப்படும்போது, அதைப் பார்க்கும் நாம் சிரிப்பது.