• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

ராஜேந்திர சோழன் கடல் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்தது ஏன்? என்ன கிடைத்தது?

Byadmin

Feb 22, 2026


ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளே சோழர்களின் கடல் கடந்த படையெடுப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறது சமீபத்திய ஆய்வுக் கட்டுரை ஒன்று. இந்தப் படையெடுப்புகளால் என்ன நடந்தது? வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது என்ன?

ராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றதாக அவரது மெய் கீர்த்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தப் படையெடுப்புகள் ஏன் நடந்தன என்பது குறித்து வரலாற்று ஆசிரியர்களிடம் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன.

தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுடன் நடந்த வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறின் காரணமாகவே இந்தப் படையெடுப்புகள் நடந்திருக்கலாம் என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று.

சென்னையில் தமிழ்நாடு அரசின் மாநில தொல்லியல் துறை சமீபத்தில் நடத்திய தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களான வி. செல்வகுமாரும் ஆர். கார்த்திகேயனும் இணைந்து ‘இடைக்காலத்தில் தமிழ்நாடு வணிகர்கள், வணிகக் குழுக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்’ (Merchants, Merchant Guilds and Trade Activities in Medieval Tamil Nadu) என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர்.

அந்தக் கட்டுரை, சோழர்கள் காலத்தில் இருந்த வர்த்தகக் குழுக்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களை அளிக்கிறது.

By admin