• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

ராணுவ தளங்களில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் என கூறும் இந்தியா

Byadmin

May 9, 2025


காணொளிக் குறிப்பு, ஜம்முவில் வெடிகுண்டுகளைக் கொண்ட டிரோன்கள் மூலம் தாக்கிய பாகிஸ்தான்- என்ன நடக்கிறது?

ஜம்முவை வெடிகுண்டுகளைக் கொண்ட டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியதாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது.

மேலும், “ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்திடம் பேசிய நபர் ஒருவர், ‘குண்டுவீசும் ஓசையும், துப்பாக்கியால் சுடும் சப்தமும் கேட்டதாகவும், வானில் புகைமூட்டமாக இருந்ததாகவும்’ தெரிவித்தார்.

By admin