• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

ராணுவ தளத்தை அணுகுவது தொடர்பாக ஸ்பெயினை எச்சரித்த டிரம்ப் – அதன் பதில் என்ன?

Byadmin

Mar 5, 2026


டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இரான் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்காவுக்கு தடை செய்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், டிரம்பின் அச்சுறுத்தல் “சர்வதேச சட்டத்தை முறிப்பதாகும்” என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், ஸ்பெயின் “மிகவும் மோசமாக” இருந்தது என்றும் “நாங்கள் ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்கப் போகிறோம்” என்றும் கூறினார். “ஸ்பெயினுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அச்சுறுத்தலை டிரம்ப் நிர்வாகம் பின்பற்றுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்தைத் தடுக்க அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான செலவினங்களை உயர்த்த வேண்டும் என்ற டிரம்பின் வலியுறுத்தலுக்கு ஸ்பெயின் அரசு எதிர்ப்பு தெரிவிப்பது உட்பட, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றங்களை டிரம்பின் கருத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன.

By admin