காணொளி: ராணுவ தூக்க முறையை பின்பற்றி 2 நிமிடங்களில் தூங்க முயற்சிப்பது ஆபத்தா?
எளிதில் தூங்குவதற்கு உதவும் என வைரலாகிவரும் ஓர் உத்தி, உண்மையில் உங்களை விழிப்பிலேயே வைத்திருக்கக்கூடும். ‘ராணுவ தூக்க முறை’ எனும் இந்த உத்தி, மூச்சுப் பயிற்சி, தசைகளை ரிலாக்ஸ் செய்தல், கற்பனையாக ஒன்றை நினைத்துக்கொள்ளுதல் ஆகியவை வெறும் இரண்டு நிமிடங்களில் நம்மை தூங்க வைக்கும் என உறுதியளிக்கிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் அழுத்தமான சூழல்களில் கடற்படை பயிற்சி மாலுமிகள் எளிதில் உறங்குவதற்காக இந்த உத்தி கண்டறியப்பட்டது. ஆனால், இரண்டு நிமிடங்களில் உறங்க வேண்டும் என முயற்சிப்பது நல்லதைவிட ஆபத்தையே உண்டாக்கும் என உறக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.