• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

Byadmin

May 11, 2025


இந்திய விமானப்படை , IAF, ஆபரேஷன் சிந்தூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் சனிக்கிழமை அறிவித்துள்ள நிலையில், இது குறித்த சமீபத்திய செய்திகள் இங்கே தொகுக்கப்படுகின்றன.

தனது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னமும் செயல்பாட்டில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”ஆபரேஷன் சிந்தூரின் கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறை நேர்மையோடும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னமும் செயல்பாட்டில் இருப்பதால், இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் கொடுக்கப்படும் எனவும், இது குறித்த ஊகங்களையும், சரிபார்க்கப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

By admin