• Sat. May 17th, 2025

24×7 Live News

Apdin News

ராமதாஸின் கூட்டத்தைப் புறக்கணித்த நிர்வாகிகள் – அன்புமணி பின்னால் திரளும் கட்சி?

Byadmin

May 17, 2025


பாமக, அரசியல், தமிழ்நாடு, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம், @draramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ். ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை அக்கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளனர். கட்சியின் பெரும் பகுதி அன்புமணி ராமதாஸ் பின்னால் திரள்வதை குறிக்கிறதா?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் வெள்ளிக்கிழமையன்று (மே 16) கூட்டியிருந்த கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே டாக்டர் ராமதாஸிற்கும் அவரது மகனும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை பலர் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று காலை பத்து மணியளவில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தைலாபுரம் தோட்டத்தில் கூட்டுவதாகும் அதில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் மே 15ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பதிவின் மூலம் அறிவித்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.

By admin