• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

ராமர் பாலமா – ஆதாம் பாலமா? – இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது?

Byadmin

Jan 7, 2026


இலங்கை மன்னார் பகுதியில்  ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் சர்ச்சையானது ஏன்?

பட மூலாதாரம், SMU

படக்குறிப்பு, இலங்கையில் வைக்கப்பட்ட பேனரில் உள்ள புகைப்படம்

இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்களில் ஒரு தரப்பினர் ராமர் பாலம் என அழைக்கின்றனர். ஆதாமின் பாலம் எனவும் சிலர் இதனை குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது.

By admin