• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

ராமேஸ்வரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த இளைஞர் கைது

Byadmin

Nov 19, 2025


ராமேஸ்வரத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ஆம் வகுப்பு மாணவியை கொலை -  என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கத்தியால் குத்தி கொலை

ராமேஸ்வரம், மாணவி கொலை, இளைஞர் கைது
படக்குறிப்பு, மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முனியராஜ்

”ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி இன்று காலை தனது தோழியுடன் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது முனியராஜ் (21) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்ததால், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தினார்.” என காவல் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த துறைமுக காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய முனியராஜை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin