• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

ரிஷப் பண்ட் உடலுக்கு வழக்கத்தை விட அதிக ஆக்சிஜனை அனுப்பும் சிசிச்சையை பெற்று வருவது ஏன்?

Byadmin

Feb 19, 2026


 ரூர்க்கி, ரிஷப் பண்ட், சாலை விபத்து, ஐபிஎல் 2026 தொடர், உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், ‘ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி’ எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்ட்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அதற்கு முன்னதாக, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, போட்டியின் போது அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தக் காயங்கள் மற்றும் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியைத் தொடங்கியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு ரிஷப் பண்ட் நம்பியிருக்கும் இந்த சிகிச்சை எப்படிப்பட்டது? இது எவ்வளவு பயனுள்ளது மற்றும் எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது? இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ட்ராமா சிகிச்சை மைய பேராசிரியர் டாக்டர் சௌரப் சிங்கிடம் பிபிசி பேசியது.

By admin