• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

ரி20 | இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவுசெய்தது; இந்தியா துடுப்பெடுத்தாடவுள்ளது

Byadmin

Mar 5, 2026


பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியன் இங்கிலாந்தும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிக்கான நாணய சுழற்சியல் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி ப்றூக் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

இதற்கு அமைய இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

அணிகள்

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா.

இங்கிலாந்து: ஃபில் சோல்ட், ஜொஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், டொம் பென்டன், ஹெரி ப்றூக் (தலைவர்),  சாம் கரன், வில் ஜெக்ஸ், லியாம் டோசன், ஜெமி ஓவர்ட்டன், ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ராஷித்.

By admin